Published : 26 Apr 2025 09:43 AM
Last Updated : 26 Apr 2025 09:43 AM
டாம் க்ரூஸ் நடித்துள்ள ‘மிஷன் இம்பாசிபிள் 8’ திரைப்படம் இந்தியாவில் ஒருவாரம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி வசூலை குவித்தது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முந்தைய பாகங்களின் வரவேற்பை கணக்கில் கொண்டு இப்படத்தை முன்கூட்டியே இங்கு வெளியிடுகிறது பாரமவுன்ட் நிறுவனம். உலகம் முழுவதும் இப்படம் மே 23-ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்தியாவில் மே 17-ஆம் தேதியே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘மிஷன் இம்பாசிபிள்’ பட ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தியாவில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT