Published : 11 Mar 2025 11:41 PM
Last Updated : 11 Mar 2025 11:41 PM
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் ஷீன். இவர் ‘அன்டர்வேர்ல்ட்: ரைஸ் ஆஃப் த லைகன்ஸ்’, ‘தி ட்விலைட் சாகா: நியூ மூன்’, ‘மிட்நைட் பாரிஸ்’ என பல படங்களில் நடித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள போர்ட் டால்போட் நகரில், டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த ஆண்டுதனது எஃகு ஆலையை மூடியதால் 2,800 ஊழியர்கள் வேலை இழந்தனர். இதனால் இந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டன. அவர்கள் குடும்பத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளனர். இதை அறிந்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் ஷீன், பாதிக்கப்பட்ட 900 ஊழியர்களுக்கு ரூ.8.7 கோடி நிதி வழங்கி, அவர்களின் கடனை அடைத்துள்ளார்.
பிரிட்டனின் சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த நடிகர் மைக்கேல் ஷீன், வேலை இழந்த தனது சொந்த ஊர் மக்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இதைச் செயல்படுத்தியுள்ளார். “வேலை இழந்த அந்த தொழிலாளர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. அவர்களின் கடன் வகைகள் மட்டும் தெரியும். போர்ட் டால்போட்-டில் ஒரு காபி ஷாபில் வேலை பார்த்தவருடன் உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, இந்த தொழிலாளர்களின் நிலை தெரியவந்தது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT