Published : 08 Oct 2024 01:05 PM
Last Updated : 08 Oct 2024 01:05 PM
லாஸ் ஏஞ்சல்ஸ்: தொடர் நெகட்டிவ் விமர்சனங்கள், குறைவான ரேட்டிங் காரணமாக ‘ஜோக்கர் 2’ திரைப்படம் மிக மோசமான வசூலைப் பெற்று வருகிறது.
வாக்கின் ஃபீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜோக்கர்’ டாட் பிலிப்ஸ் இயக்கிய இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான சான்றிதழ் பெற்ற படமாக இருந்தும் இது உலகமெங்கும் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான வசூல் செய்திருந்தது. இப்படத்துக்காக ஃபீனிக்ஸுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
இந்த சூழலில் இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜோக்கர் ஃபாலி அ டூக்ஸ்’ படம் கடந்த வாரம் வெளியானது. முந்தைய பாகத்தில் இருந்த நேர்த்தியும், சிறப்பான கதாபாத்திர வடிவமைப்பும் இந்த படத்தில் இல்லை என்பதால் இப்படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் திரைப்படங்களுக்கு ரேட்டிங் வழங்கும் ராட்டன் டொமேட்டோஸ் (36%), ஐஎம்டிபி (5.3) உள்ளிட்ட தளங்களும் மிக மோசமான ரேட்டிங்கை வழங்கியுள்ளன. இதுவரை வெளியான டிசி படங்களிலேயே குறைந்த ரேட்டிங் பெற்ற படங்களில் ஒன்றாக ‘ஜோக்கர் 2’ மாறியுள்ளது.
வாசிக்க > Joker: Folie À Deux விமர்சனம்: தேவையின்றி உடைக்கப்பட்ட ‘கிளாசிக்’ ஃபர்னிச்சர்!
இதுஒருபுறமென்றால் வசூலிலும் இப்படம் சோபிக்கவில்லை. முந்தைய பாகம் வசூலில் உலகம் முழுவதும் சாதனை புரிந்தநிலையில், இந்த படம் உலகம் முழுவதும் 40 மில்லியன் டாலர்களை தாண்டவே திணறிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT