Published : 08 Jan 2024 10:00 AM
Last Updated : 08 Jan 2024 10:00 AM

சிறந்த படம் ‘ஒப்பன்ஹெய்மர்’, சிறந்த இயக்குநர் நோலன் - கோல்டன் குளோப் விருதுகள் 2024 முழு பட்டியல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. Hollywood Foreign Press Association சார்பில் நடக்கும் இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

அதன் படி இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கிறிஸ்டோபர் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படத்துக்கு சிறந்த டிராமா படத்துக்கான கோல்டன் குளோப் வழங்கப்பட்டது. கோல்டன் குளோப் விருது வெற்றியாளர்கள் முழு பட்டியல்:

* சிறந்த திரைப்படம் (டிராமா) - ஒப்பன்ஹெய்மர்
* சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
* சிறந்த நடிகை (டிராமா) - லிலி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்)
* சிறந்த நடிகர் (டிராமா) - சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
* சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) - புவர் திங்ஸ்
* சிறந்த திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்
* சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) - எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
* சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) - பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)
* சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
* சிறந்த துணை நடிகை - டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
* சிறந்த டிவி தொடர் (டிராமா) - சக்ஸசன்
* சிறந்த டிவி தொடர் (மியூசிக்கல்/ காமெடி) - தி பியர்
* சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) - லுட்விக் யோரன்ஸோன் ஒப்பன்ஹெய்மர்
* சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) - அனாடமி ஆஃப் எ ஃபால்
* சிறந்த பாடல் - ’வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ (பார்பி - பில்லீ எலீஷ்)
* சிறந்த அனிமேஷன் படம் - ’தி பாய் அண்ட் தி ஹெரோன்
* சிறந்த வசூல் சாதனை படம் - பார்பி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x