Last Updated : 19 Jul, 2015 02:38 PM

 

Published : 19 Jul 2015 02:38 PM
Last Updated : 19 Jul 2015 02:38 PM

நவாசுதீன் சித்திக்: நம்மைக் கடக்கும் யாரோ ஒரு நடிகரல்ல!

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பெரிய நட்சத்திரத்துக்கும் ஒரு சாதாரண நடிகனுக்கும் உள்ள இடைவெளியை உடைத்துக் கொண்டிருப்பவர், இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் .

நேர்காணலுக்காக அவரை அணுகியபோது நமது கேள்விகளை புரிந்துகொள்ள சற்றே நேரம் எடுத்துக்கொள்கிறார். இப்பொழுதும் அவருக்கு ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால் தன்னுடைய தேர்வுகள் சார்ந்த கவலைகள் எதுவுமின்றி இன்னும் ஒரு எழுதப்படாத கரும்பலகையாகத்தான் இருக்கிறார்.

நவாசுதீன் சித்திக் இந்தித் திரைப்படங்களில் தோன்றும் பாத்திரங்கள் எதுவும் நீங்கள் எதிர்பாராததாக இருப்பதை ஒவ்வொரு முறையும் நீங்கள் உணர்வீர்கள். ஒவ்வொரு முறையும் அவர் திரைப்படத்தைக் கடந்தும் உங்களுக்கு சற்று உறுதியளிப்பார். உங்களை நல்வழிப் படுத்துவதில் அவர் குறைவைப்பதில்லை.

''என்னிடம் ஆர்வம் அப்படியே தங்கியிருக்கவேண்டும் என விரும்புகிறேன். நான் அடித்தளமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். திருப்தி என்பதையே அவமதிப்பாக கருதுகிறேன்'' என்கிறார். இந்த ஆண்டு 'பட்லாப்பூர்' திரைப்படம் வந்ததிலிருந்தே அவர் நம்மை சற்றே நிலைதடுமாறச் செய்துவிட்டார். இத்திரைப்படத்தில் ஆரம்பக் காட்சியில் வரும் அவரது வித்தியாசமான பாத்திரமே நம்மை உருக வைத்துவிடுகிறது.

இந்தவாரம் வெளிவந்த 'பஜ்ரங்கி பாய்ஜான்' திரைப்படத்தில் அவர் பாகிஸ்தானிய செய்தியாளராக தோன்றுகிறார். பேச இயலாத பாகிஸ்தானியக் குழந்தையை இந்தியாவுக்கு எடுத்துச்செல்லும் சல்மானுக்கு வெளிப்படையாக உதவும் பாத்திரம் அவருக்கு.

அவர் முதலில் செய்தியாளர்களைப் பற்றியே ஆரம்பித்தார்...

''செய்தியாளர்கள் பெரும்பாலும் நடிகர்களுக்கு குடும்பத்தினர்களைப் போலவே இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திற்குப் பிறகும் அவர்களிடம் நாம் பல்வேறு விஷயங்களைப் பேச முடிகிறது. என்னுடைய போராட்டத்தை மீடியா மிகவும் அக்கறையோடு பார்த்தது'' என நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் தற்போது நடித்து வரும் பாத்திரத்தைப் பற்றி மட்டுமே பேசினார். 'பஜ்ரங்கி பாய்ஜான்' திரைப்படத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளில் சிக்கிக்கொண்ருக்கும் சல்மான்கானை விடுவிக்கும் ஒரு எளிய ரிப்போர்ட்டராக அவர் வருகிறாராம்.

அதேநேரத்தில் இப்படத்தில் அவர் தோன்றும் பாத்திரத்தின் முழு நோக்கத்தையும் சொல்ல விரும்பவில்லை. அதன்மூலம் படத்தின் மையக்கருத்தும் வெளியே வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகக் கூறுகிறார். 'கிக்' திரைப்படத்தில கவனமாக நடிக்கவேண்டியிருந்தது. இரண்டு காரணங்கள். அப்படத்தின் அசாதாரண தன்மை. மற்றும் படத்தின் தொனி. இங்கு அது பிரச்னையில்லை. ஆனால் சுவரில் உள்ள ஒரு ஈ ஆகும் தேவை கூட அதில் எழவில்லை.

'பஜ்ரங்கி பாய்ஜான்' திரைப்படம் இந்த வாரம் வெளிந்தாலும், நவாஸ் ''மாஞ்சி - மவுன்டைய்ன் மேன்'' திரைப்படத்தைப் பற்றி பேசுவதில்தான் அவருக்கு மிகவும் ஆர்வம் இருப்பது தெரிகிறது.

அதன் முதல் முன்னோட்டக் காட்சிகளும் சமீபத்தில் வெளிவந்து இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்ந்து வருகிறது.

இயக்குநர் கேதன் மேத்தா இயக்கிய இத்திரைப்படம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற பீகாரைச் சேர்ந்த முதியவர் தாஷ்ரத் மாஞ்சி என்பவரின் வாழ்க்கையைச் சொல்கிறது. தன் மனைவி பிரசவத்திற்கு மலையைச் சுற்றி அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரசவத்திற்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே மனைவி இறந்துவிடுகிறாள். இந்த அவலத்திற்குக் காரணம் அந்த மலை. அந்த மலையைப் பிளந்து வழியமைப்பதே அவரது வாழ்க்கை லட்சியமாகிறது. இதுநாள்வரை மருத்துவமனை உள்ள ஊருக்கு சுற்றி வளைத்துச் சென்றகொண்டிருந்த குக்கிராம மக்களுக்கு விடிவை உண்டாக்கித் தந்துவிட்டார். அவர் ஒற்றை ஆளாகவே முயன்று மலைப் பிளந்து பாதையை உண்டாக்கினார்.

''கிக்', 'பாய்ஜான்' போன்ற சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்தேன். அவைகள் கவனிக்கப்பட்டன. ஆனால் தரத்தைப் பொறுத்தவரை எந்த சமரசமும் கிடையாது. அதனால் சரியான வாய்ப்புகள் அமையாத பட்சத்தில் படத்தில் நடிப்பதற்கில்லை என்று திட்டவட்டமாக கூறுவதற்கும் திறமை வேண்டும். நான் அதை தக்கவைத்துக் கொள்ளவிரும்பினேன்.

என் மூத்த கலைஞர்கள் பலரும் ஒரு வாய்ப்புகள் எனும் பொறிக்குள் சிக்கிக்கொண்டு தங்களை அழித்துக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புகள் இருககும்போது அதே தவறை நானும் செய்ய விரும்பவில்லை'' என்று தன்னுடைய பாத்திர தேர்வு குறித்த தெளிவாகப் பேசினார் நவாஸ்.

அடுத்ததாக மாஞ்சியைப் பற்றிபேசும்போது அவரது உற்சாகம் பெருகுகிறது.

கயா மாவட்டத்தில் உள்ள காக்லூர் கிராமத்து மக்கள் பேசுவதை விடியோவில் பார்த்தேன். மாஞ்சியின் உன்னதமான உணர்வை கொண்டுவரவேண்டும் என்பதற்காக நாங்கள் அவரது கிராமச் சூழல்களையும் அங்குள்ள பேச்சுவழக்கையும் படத்தில் சரியாகக் கொண்டுவர முயன்றோம். மாஞ்சியை நான் புரிந்துகொண்ட வரையில் அவர் எந்தவகையான தனது உணர்ச்சிகளையும் மறைக்காமல் வெளிப்படுத்தக்கூடியவர் என்பதுதான்.

இயற்கையை எதிர்த்து அதை ஒரு கை பார்த்ததில் மட்டுமல்ல தன் காதலை நிரூபித்தவகையிலும் அவர் நாம் கடந்துசெல்லும் பலரைப் போல யாரோ ஒரு மனிதர் அல்ல.

நாட்டின் உள்கட்டமைப்பு சார்ந்த பற்றாக்குறைகளுக்கு தீர்வுகாணாத அரசாங்கத்தின் அக்கறையின்மையைப் பற்றி நம்மில் பலரும் புலம்புவதைப்போல அவர் புலம்பிக்கொண்டிருக்கவில்லை. அதேபோல மலையை உடைத்ததை விட இச்செய்தியை வெளியே வந்ததைக்கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்.

எல்லாவற்றையும் கடவுளிடமே விட்டுவிடவேண்டியதில்லை. நாம் சாதிக்கவும் அவர் சில விஷயங்களை விட்டுவைத்திருக்கிறார் என்று கூறிய அவரது நோக்கத்தை புரிந்துகொள்ளமுடிகிறது.

இப்படத்தில் ராதிகா ஆப்தே முக்கிய பங்கு ஆற்றியுள்ளார். மாஞ்சியின் அன்புமனைவியாக அவர் திரையில் வாழ்ந்துகாட்டிய விதத்தைக்கொண்டே மாஞ்சி மலையைப் பிளப்பதற்கான உந்துசக்தியாக இருந்த தீவிர நேசத்தை நம்மை உணரச் செய்துவிட்டார். அந்த பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது தன்னைச் சுற்றியுள்ள எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவ்வளவு சிறந்த நடிகை அவர்.

இந்தி மைய நீரோட்ட சினிமாக்கள் எப்போதாவதுதான் ஏழை மனிதனின் காதல் கதைகளில் கவனம் செலுத்துகின்றன. நகர்ப்புற கற்பனைகளிலோ அல்லது சரித்திரக் காதல்கதைகளிலோ இந்தி சினிமா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஷாஜஹான் மும்தாஜ் மீது செலுத்திய தெய்வீகக் காதலைவிட எந்தவிதத்திலும் குறைந்ததில்லை மாஞ்சியின் காதல்.''

ஒரு விதத்தில் பார்த்தால் நவாஸ்ஸும்கூட மாஞ்சியைப் போன்றவர்தான். முகராசியிலும் உடற்கட்டிலும் மயங்கிக் கிடக்கும் ஒரு தொழில்துறையை தனது தொடர்ச்சியான செயல்திறனால் மாற்றியமைத்தவர் அவர்.

''மாஞ்சியைப் போல அங்கீகாரத்திற்காக பல பத்தாண்டுகள் நான் காத்திருக்கமாட்டேன். என்னுடைய போராட்டம் வலிமிகுந்ததல்ல. இந்தி திரைத்துறையோ என்னை மிகச் சாதாரண மனிதனின் ஒரு ஆளுமையாகத்தான் பார்க்கிறது. ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்பட்டதில்லை. சாதாரண மனிதனின் எல்லா வண்ணங்களையும் திரையில் கொண்டுவரவே நான் விரும்புகிறேன்.

இப்போதுள்ள ஹீரோக்களும் வில்லன்களும் ஏற்கெனவே நாம் 70களிலும் 80களிலும் நாம் பார்த்துவிட்டோம். இப்போது எந்த ஹீரோக்களும் தவறிழைக்காதவர்கள் இல்லை. இருட்டில் மறைந்திருக்கும் வில்லன்கள் என்று யாரும் இல்லை. நட்சத்திர அந்தஸ்தில் திளைத்திருக்க இது நடிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான இடம் என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இது உன்னுடைய காட்சி, இது என்னுடைய காட்சி யாரும் சொந்தக்கொண்டாட முடியாது. ஏனென்றால் உண்மையான திறமைக்கும் தந்திரமாக போலிசெய்தலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ரசிகர்கள் நன்றாக அறிந்துவைத்திருக்கிறார்கள்.''

உண்மையில் நவாஸ், சல்மான்கானைப் பற்றி சொல்லவரும்போது அவர் எனக்கு சிறந்த இணை நடிகராக அமைந்துள்ளதாக குறிப்பிடுகிறார். அதேநேரத்தில் நவாஸ் தன்னை இர்ஃபானுக்கு போட்டியாக நிலைநிறுத்தும் வகையில் நடித்துக்கொண்டிருப்பதாகவும் கருதுகிறார். சல்மான் என்னை நவாஸ் என்றே எப்பொழுதும் பார்ப்பதில்லை. அவர் எப்போதும் என்னை ஒரு பாத்திரமாகத்தான் கருதிவருகிறார். காரணம் 'பவன்' எனும் பெயரில் உள்ள அக்கதாபாத்திரத்திலேயே என்னைப் பொருத்திப் பார்த்ததுதான்.

அதேநேரத்தில் இது பவனாக நடிக்கும் நவாஸ் என்பதும் அவருக்குத் தெரியும் என்று சிரிக்கிறார் நவாஸ். இப்படத்தின் இயக்குநர் கபீர் கான் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பதையும் முன்பு அவரிடம் பணிபுரிந்ததையும் நன்றாக புரிந்துவைத்துள்ளார். எனவே படபிடிப்பின்போது ஏற்கெனவே உள்ள விஷயங்கள் தேய்வழக்காக வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். எந்தவகையிலும் இது சல்மான் கான் படம் இல்லை. கபீர் ஆவணப்படங்களிலிருந்து வந்தவர். சல்மான் கானின் சென்ற படங்களை ஒப்பிடும்போது இது யதார்த்ததில் வேர்கொண்டுள்ள கதையம்சம் கொண்டது.''

நவாஸ் முசாஃபர்நகருக்கு அருகிலுள்ள புதானா கிராமத்திலிருந்து வந்தவர். சமீபத்தில்கூட அவருடைய கிராமம் மிகவும் மோசமான வகையில் சாதிசண்டையை எதிர்கொண்டது.

இது பற்றி அவர் கூறுகையில்,''இப்போது வன்முறையற்ற ஊராக மாறியுள்ளது. அதற்குக் காரணம் கிராமத்துப் பெரியவர்களின் விவேகமிக்க அறிவுரைதான். ஆனால் இனவாத தீயில் விழநேர்ந்த அருகிலுள்ள கிராமங்களை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அரசியல்வாதிகள்தான் மக்களைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் வடிவமைக்க விரும்பும் வகையில்தான் இப்பிரச்சனைகள் உருப்பெருகின்றன. இப்பழி நம்மீதுதான் விழும் என்பதையும் உணர்கிறேன். பாகிஸ்தான் பிரச்சனைக்கும் இதையே அளவுகோலாகக் கொள்ளலாம். இருதரப்பு பொதுமக்களும் வன்முறையை விரும்பவில்லை. பஜ்ரங்கி சொல்லவரும் செய்தியும் இதுதான். மிகவும் எளிமையானது, வெறும் உணர்ச்சியில் விளைந்த சொற்கள். பெயரளவுக்கு இருதரப்புக்கும் உதவுவதுபோல இருக்கக்கூடாது.

முஸ்லிம் பாத்திரத்தில் நடிக்க ஒரு ஹிந்து நடிகரே வேண்டியிருந்தது ஒரு காலம். இப்போது அப்படியில்லை. அதற்கு யார் பொருந்துவார்களோ அதன்படி அமைந்துவிட்டது.'' இதற்கிடையில் அவர் சிறியதும் பெரியதுமாக சில முயற்சிகளை தொடர்கிறார். இதன்பிறகு 'கூம்கேது' எனும் சிறிய பட்ஜெட் படத்தில் ஷாரூக்கானோடு இணைந்து நடிக்கிறார். இதில் அவருக்கு ஊர்க் காவல்கார் கேரக்டர்.

தமிழில்: பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x