Published : 04 Nov 2014 01:27 PM
Last Updated : 04 Nov 2014 01:27 PM
புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சதாசிவ் அமரபுர்கர் (64) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அமரபுர்கர் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக அவரது மகள் ரீமா அமரபுர்கர் தெரிவித்தார்.
அகமது நகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த ஊரில் அமரபுர்கரின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறும் எனவும் ரீமா தெரிவித்துள்ளார்.
துணை நடிகர், வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்த இவர் 2 முறை ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். 1984-ம் ஆண்டு வெளியான ‘அர்த் சத்யா’ என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், 1991-ல் வெளியான ‘சதக்’ திரைப்படத்துக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருதும் கிடைத்தது.
ஆங்கென், இஷ்க், கூலி நெ.1 மற்றும் குப்த்: தி ஹிடன் ட்ரூத் ஆகியவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத் தக்கவை. கடைசியாக 2012-ல் வெளியான ‘பாம்பை டாக்கீஸ்’ என்ற படத்தில் நடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT