Published : 03 May 2019 05:38 PM
Last Updated : 03 May 2019 05:38 PM
நான் இந்தியன்தான் தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பாதீர்கள் என நடிகர் அக்ஷய் குமார் ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் நேர்காணல் கண்ட நடிகர் அக்ஷய் குமார். அதன்பின்னர் சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். அவர் கனடா நாட்டு குடியுரிமை கொண்டவர் என்பதை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர், "எனது குடியுரிமை குறித்து தேவையற்ற ஆர்வம் காட்டப்படுகிறது. நிறைய எதிர்மறை சிந்தனைகள் பரப்பப்படுகின்றன. என்னிடம் கனடா நாட்டு பாஸ்போர்ட் இருப்பதை நான் எப்போதுமே மறுத்ததில்லை.
அதேபோல், நான் கடந்த 7 வருடங்களில் ஒருமுறைகூட கனடா செல்லவில்லை என்பதும் உண்மையே. நான் இந்தியாவில் வேலை பார்க்கிறேன். இங்குதான் எனது வருமான வரியை செலுத்துகிறேன்.
இத்தனை ஆண்டுகளில் என் தேசத்தின் மீதான எனது அன்பை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு வந்ததே இல்லை. ஆனால், இப்போது எனது குடியுரிமை விவசாரம் தேவையற்ற சர்ச்சைக்குள் இழுத்துவிடப்பட்டுள்ளது. இது எஅது தனிப்பட்ட விவகாரம். சட்டபூர்வமான அரசியல் சார்பற்ற விஷயத்தை ஏன் சர்ச்சையாக்குகிறார்கள்.
இந்தியாவை வலுவாக மாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதில் எனது பங்களிப்பு சிறிதளவேனும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT