Published : 16 Nov 2025 11:22 AM
Last Updated : 16 Nov 2025 11:22 AM
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், நவ.28-ல் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இது காதல் படம் என்பதால் தனுஷ் மற்றும் கீர்த்தி சனோனிடம் அதுபற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.
தனுஷ் கூறும்போது, “காதல், மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்று நினைக்கிறேன்” என்றார். தனுஷின் பதிலால் ஆச்சரியமடைந்த செய்தியாளர்கள், கீர்த்தி சனோனிடம் கேட்டனர். அவர் சிரித்தபடி, சங்கர் (தனுஷ் கதாபாத்திரம்) எனது பதிலுடன் உடன்படாமல் இருக்கலாம் என்றவர், “நான் காதலை முழுமையாக நம்புகிறேன்.
உண்மையான மற்றும் ஆழமான காதலுக்கு பல வரையறைகள் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் காதலுக்காக மாற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தயக்கமின்றி ஒருவருடன் சிரிக்க முடிந்தால் அதுதான் காதல் என்பது என் கருத்து” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT