Published : 13 Nov 2025 11:54 AM
Last Updated : 13 Nov 2025 11:54 AM

தாதா சாகேப் பால்கே பயோபிக் நிறுத்தம்!

ஆமிர்கான் நடிக்க இருந்த, தாதா சாகேப் பால்​கேவின் பயோபிக் படம் நிறுத்திவைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய சினி​மா​வின் தந்தை என்​றழைக்​கப்​படும் தாதா சாகேப் பால்​கேவின் வாழ்க்​கைக் கதையை ராஜ்கு​மார் ஹிராணி இயக்​கு​வ​தாக​வும் ஆமிர்​கான், பால்​கே​-வாக நடிப்​ப​தாக​வும் அறிவிக்​கப்​பட்​டது.

இந்​தப் படத்​தின் கதை​யில் சில இடங்​களில் மாற்​றம் செய்ய வேண்​டும் என ஆமிர்​கான் கூறிய​தாக​வும் இதனால் படப்​பிடிப்பு தாமத​மாகி வருவதாகவும் ஏற்​கெனவே செய்​தி​கள் வெளி​யா​யின. ஆனால், இதை பால்​கே​வின் பேரன் சந்​திரசேகர் ஸ்ரீகிருஷ்ணா புசல்​கர் மறுத்​திருந்​தார். இதன் படப்​பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்​கிறது என்​றும் வித்யா பாலன், பால்கே மனை​வி​யாக நடிப்​ப​தாக​வும் கூறப்​பட்​டது. ஆனால், பலமுறை கதை திருத்​தம் செய்த பிறகும், ஆமிர்​கானுக்கு திருப்தி இல்​லாத​தால் இப்​படத்​தைத் தற்​காலிக​மாக நிறுத்த முடிவு செய்​துள்​ளனர்.

இதற்​கிடையே, இயக்​குநர் ராஜமவுலி​யும் பால்​கே​வின் பயோபிக்கை இயக்க இருப்​ப​தாகக் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்​கப்​பட்​டது. அதில் ஜூனியர் என்​.டி.ஆர். பால்கே கதா​பாத்​திரத்​தில் நடிக்க இருப்​ப​தாகக்​ கூறப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x