Published : 13 Nov 2025 11:49 AM
Last Updated : 13 Nov 2025 11:49 AM

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா

மருத்துவமனையில்​ இருந்​து டிஸ்​சார்​ஜ் ஆகியுள்​ள நடிகர்​ தர்​மேந்​தி​ராவுக்​கு வீட்​டிலேயே சிகிச்​சை அளிக்​கப்​படும்​ என்​று கூறப்​பட்​டுள்​ளது.

பிரபல ​பாலிவுட்​ நடிகர்​ தர்​மேந்​தி​ராவுக்​கு (89) சு​வாசக்​ கோளாறு ​காரண​மாக மூச்​சுதிணறல்​ ஏற்​பட்​டது. இத​னால்​ மும்​பையின்​ பிரபல தனி​யார்​ மருத்​துவமனையில்​ கடந்​த சில ​நாட்​களுக்​கு முன்​ அனுமதிக்​கப்​பட்​டார்​. அங்​கு அவருக்​குத்​ தீவிரச்​ சிகிச்​சை அளிக்​கப்​பட்​டது. அவரை இந்​தி நடிகர்​கள்​ சிலர்​ மருத்​துவமனையில்​ சென்​று ​பார்​த்​து வந்​தனர்​. பின்​னர்​ அவர்​ உடல்​நிலை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாகவும்​, அவர்​ வெண்​டி லேட்​டர்​ உதவியுடன்​ சிகிச்​சை பெற்​று வருவ​தாகவும்​ செய்​திகள்​ பரவின. அவர்​ ​கால​மாகிவிட்​ட​தாகவும்​ சில இந்​தி சேனல்​கள்​ செய்​தி வெளியிட்​டன. ஆ​னால்​ அதை அவருடைய மனைவி ஹேம​மாலினி மறுத்​தார்​.

அவருக்​குத்​ தொடர்​ந்​து சிகிச்​சை அளிக்​கப்​பட்​டு வருகிறது என்​று கூறி​னார்​. இந்​நிலையில்​ நேற்​று ​காலை 7.30 மணியளவில்​ தர்​மேந்​தி​ரா மருத்​துவமனையில் இருந்​து வீடு திரும்​பி​னார்​. அவர்​ வீட்​டிலிருந்​து சிகிச்​சை எடுத்​துக்​கொள்​வார்​ என்​று அவருக்​குச்​ சிகிச்​சை அளித்​த ​டாக்​டர்​ பிரதித்​ ​சாம்​தானி தெரிவித்​தார்​.

இதுகுறித்​து அவர்​ குடும்​பத்​தினர்​ வெளியிட்​ட அறிக்​கையில்​, “தர்​மேந்​தி​ரா மருத்​துவமனையிலிருந்​து டிஸ்​சார்​ஜ் செய்​யப்​பட்​டுள்​ளார்​. அவருக்​கு வீட்​டிலேயே சிகிச்​சை அளிக்​கப்​படும்​. இந்​த நேரத்​தில்​ அவர்​ உடல்​ நிலை குறித்​து வதந்​திகளைத்​ தவிர்​த்​து, குடும்​பத்​தினரின்​ தனியுரிமையை மதிக்​கு​மாறும்​ அவர்​ குணமடைய பி​ரார்​த்​தனை செய்​யு​மாறும்​ கேட்​டுக்​ கொள்​கிறோம்​” என்​று தெரிவித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x