Published : 12 Nov 2025 09:52 AM
Last Updated : 12 Nov 2025 09:52 AM
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவைகளை செய்தவர், கன்னியாஸ்திரி ராணி மரியா. அவர் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’ (முகமற்றவரின் முகம்).
ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம், 2024ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற இப்படத்தில், வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் நடித்துள்ளனர். 136 நிமிடங்கள் ஓடும் இப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் நவ.21ம் தேதி வெளியாகிறது.
ஷைசன் பி.உசுப் இயக்கியுள்ள இப்படத்துக்கு மகேஷ் ஆனே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயபால் ஆனந்தன் கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தை சான்றா டிசூசா ராணா தயாரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT