Published : 03 Nov 2025 01:29 PM
Last Updated : 03 Nov 2025 01:29 PM

கார்கில் போர் பற்றிய வெப் தொடர்: விமானப்படை வீரராக நடிக்கிறார் சித்தார்த் 

இந்​தியா - பாகிஸ்​தான் இடையே 1999- ம் ஆண்டு கார்​கில் போர் மூண்​டது. கார்​கில், ஜம்மு மற்​றும் காஷ்மீரில் உள்ள சில பகு​தி​களில் பாகிஸ்​தான் ராணுவ​மும் தீவிர​வா​தி​களும் ஊடுருவ முயன்​றனர். அவர்​களை இந்​திய ராணுவம் விரட்​டியடித்​து, ஆக்​கிரமிக்​கப் பட்ட பகு​தியை மீட்​டது.

இந்​தப் போரில் இந்​திய விமானப்​படை மேற்​கொண்ட நடவடிக்​கைகளுக்கு ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ என்று பெயரிடப்​பட்​டது. பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் தீவிர​வாத முகாம்​கள், ஆயுதங்​கள் மற்​றும் விநி​யோக வழித்​தடங்​களை அழிப்​ப​தில் பெரும் பங்​காற்​றியது.

இந்​நிலை​யில் இந்த விமானப்​படை​யின் பணியை ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ என்ற பெயரில் வெப் தொட​ராக்​கி​யுள்​ளனர். அடுத்த ஆண்டு நெட்​பிளிக்​ஸில் வெளி​யாக இருக்​கும் இந்த வெப் தொடரில் சித்​தார்த், ஜிம்மி ஷெர்​கில், அபய் வர்​மா, மிஹிர் அஹுஜா, தாருக் ரெய்​னா, அர்​னவ் பாசின் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ஓனி சென் இயக்​கி​யுள்​ளார்.

மேட்ச் பாக்ஸ் ஷாட்ஸ் மற்​றும் ஃபீல்​குட் பிலிம்ஸ் தயாரித்​துள்ள இந்த வெப் தொடர், இந்​திய விமானப்​படை​யின் ஆதர​வுடன் உருவாகி​யுள்​ளது.கார்​கில் போரின் அதி​கம் அறியப்​ப​டாத பக்​கங்​களை இத்​தொடர் பேசும் என்​கிறார்​கள். டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற செகோன் இந்​திய விமானப்​படை மாரத்​தான் 2025 -ன் தொடக்க விழா​வில் இந்த வெப்​தொடரின் டீஸர் வெளி​யிடப்​பட்டு இணை​யத்​தில்​ வரவேற்​பைப்​ பெற்​றுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x