Published : 16 Oct 2025 12:51 AM
Last Updated : 16 Oct 2025 12:51 AM
புதுடெல்லி: பி.ஆர்.சோப்ராவின் 1988-ம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான மகாபாரத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் பங்கஜ் தீர் நேற்று காலமானார். அவருக்கு வயது 68.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பங்கஜ் தீர், கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சந்திரகாந்தா, பதோ பாகு, கானூன் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் சோல்ஜர், ஆண்டாஸ், பாட்ஷா உள்ளிட்ட பல்வேறு திரைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். இவரது மகன் நிகிதின் தீர், மருமகள் கிராத்திகா செங்கரும் நடிகர்கள் ஆவர்.
பஞ்சாபை சேர்ந்த பங்கஜ் தீர், திரைப்பட இயக்குநர் சி.எல்.தீரின் மகன் ஆவார். நடிப்பு மட்டுமின்றி தனது சகோதரருன் சேர்ந்து மும்பையில் படப்பிடிப்பு ஸ்டுடியோவை நிறுவியதன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் முன்னணி வகித்தார். 2010-ல் நடிப்பு பயிற்சிக்கான அகாடமியை தொடங்கினார். கடந்த 1980-களில் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் தொலைக்காட்சி தொடர் மிகப் பெரிய புகழை பெற்றுத் தந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT