Published : 04 Oct 2025 06:59 AM
Last Updated : 04 Oct 2025 06:59 AM

வீடியோ கேமின்போது மகளிடம் நிர்வாண படம் கேட்ட நபர்: அக்‌ஷய் குமார் விழிப்புணர்வு தகவல்

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் சைபர் பாது​காப்பு விழிப்​புணர்வு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த சில மாதங்​களுக்கு முன்​னர் என் வீட்​டில் நடை​பெற்ற ஒரு சிறிய சம்​பவத்தை உங்​களுக்கு சொல்​கிறேன். என் மகள் நிதாரா வீடியோ கேம் விளை​யாடிக் கொண்​டிருந்​தாள். அப்​படி விளை​யாடும் போது, எதிர் தரப்​பில் விளை​யாடும் முகம் தெரி​யாத நபர்​களிடம் இருந்து குறுந்​தகவல்​கள் வரும். எப்​படி இருக்​கிறீர்​கள்? நீங்​கள் ஆணா, பெண்ணா என்று பல கேள்வி​கள் வரும்.

அப்​படி கேட்ட போது, பெண் என்று என் மகள் பதில் அனுப்​பி​னாள். உடனே எதிர் தரப்​பில் விளை​யாடி கொண்​டிருந்த அந்த நபர், ‘உங்​கள் நிர்​வாண படத்தை அனுப்ப முடி​யு​மா?’ என்று என் மகளுக்கு குறுந்​தகவல் அனுப்​பி​னார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என் மகள், உடனே வீடியோ கேமை அணைத்​து​ விட்​டு, நடந்த விவரத்தை என் மனை​வி​யிடம் கூறி​னாள்.

இப்​படி முகம் தெரி​யாத நபர் குறுந்​தகவல் அனுப்​புவதும் சைபர் மோசடி​தான். இந்​தச் சூழ்​நிலை​யில், பள்​ளி​களில் 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வாரந்​தோறும் ‘சைபர் மோசடி’ குறித்து பாடம் நடத்த மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸை கேட்​டுக் கொள்​கிறேன். தெரு​வில் நடக்​கும் குற்​றங்​களை விட இது​போல் இணை​யதளத்​தில் நடக்​கும் குற்​றங்​கள் மிகப்​பெரியது. இதை தடுத்து நிறுத்த வேண்​டியது மிக​வும் அவசி​யம். இவ்​வாறு அக்​ ஷய்​ குமார்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x