Published : 20 Aug 2025 07:09 AM
Last Updated : 20 Aug 2025 07:09 AM

‘த பெங்கால் ஃபைல்ஸ்’ பட விழாவை நிறுத்துவதா? - மேற்கு வங்க அரசை விமர்சிக்கும் பல்லவி ஜோஷி 

இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மதக் கலவரம் மூண்டது. அதில் இந்துக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை மையமாக வைத்து, ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார்.

இவர், ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கியவர். இதில் தர்ஷன் குமார்,பல்லவி ஜோஷி , சிம்ரத் கவுர், மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர் , சாஸ்வதா சாட்டர்ஜி என பலர் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவை, கடந்த 16-ம்தேதி கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. ஆனால், அதற்கு அம்மாநில அரசு மறுத்து தெரிவித்ததால், டிரெய்லர் வெளியீடு பாதியில் நிறுத்தப்பட்டது. போலீஸார் திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியின் மனைவியும் நடிகையுமான பல்லவி ஜோஷி, மேற்கு வங்க அரசைக் கடுமையான விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்தப் படத்தின் கதை மேற்கு வங்கத்தில் நடப்பதால், அம்மாநிலத்தில் டிரெய்லரை வெளியிடுவது பொருத்தமானது என்று நினைத்தோம். ஆனால் அரசு எங்களை அனுமதிக்கவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் நகைப்புக்குரியது. போலீஸாரும் சரியான விதத்தில் நடந்து கொள்ளவில்லை. இந்த நடவடிக்கை தன்னிச்சையானது மட்டுமல்ல, அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவும் அதைப் பார்க்கிறோம்” என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x