Last Updated : 29 Jun, 2025 10:18 PM

1  

Published : 29 Jun 2025 10:18 PM
Last Updated : 29 Jun 2025 10:18 PM

ஒருவரின் துயரத்தை ஏன் இப்படி காட்ட வேண்டும்? - பத்திரிகையாளர்களை கடுமையாக சாடிய வருண் தவான்

ஷெஃபாலி ஜரிவாலா மறைவை காட்சிப்படுத்தியது தொடர்பாக பத்திரிகையாளர்களை கடுமையாக சாடியிருக்கிறார் வருண் தவான்.

‘பிக் பாஸ் 13’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஷெஃபாலி ஜரிவாலா. இவர் அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய மரணம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து வருவது, இறுதி சடங்குகள் உள்ளிட்ட அனைத்தையுமே மீடியாவில் காட்சிப்படுத்தினார்கள்.

இது முன்னணி நடிகர் வருண் தவானை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “மற்றொரு ஆன்மாவின் மரணத்தை முறையற்ற வகையில் மீடியாவில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒருவரின் துயரத்தை நீங்கள் ஏன் இப்படி காட்ட வேண்டும் என்று புரியவில்லை. அனைவருமே இதைப் பார்த்து மிகவும் சங்கடமாக உணர்கிறார்கள். இது யாருக்கு எப்படி பயனளிக்கிறது. மீடியாவில் உள்ள எனது நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், ஒருவருடைய இறுதிப் பயணத்தை காட்டும் விதம் இதுவல்ல” என்று தெரிவித்துள்ளார் வருண் தவான்.

கடந்த 2002-ம் ஆண்டு இசை ஆல்பமான ‘Kaanta Laga’ மூலம் ஷெஃபாலி கவனம் ஈர்த்தார். தொடர்ந்து ‘முஜ்சே ஷாதி கரோகி’ என்ற படத்தில் சல்மான் கான் உடன் நடித்தார். 2019-ல் ‘பேபி கம் நா’ என்ற வெப் சீரிஸில் நடித்தார். பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், 42 வயதான அவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x