Last Updated : 27 May, 2025 08:38 AM

 

Published : 27 May 2025 08:38 AM
Last Updated : 27 May 2025 08:38 AM

Dhadak 2: தணிக்கையில் 16 ‘கட்’ உடன் ரிலீஸுக்கு தயாரான ‘பரியேறும் பெருமாள்’ இந்தி ரீமேக்

மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீமேக் ஆன ‘தடக் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தடக் 2’. இதில் சித்தாந்த் சதுர்வேதி, திரிப்தி திம்ரி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ரீமேக் ஆகும். இதன் முதல் பாகம் மராத்தியில் நாகராஜ் மஞ்சுலே இயக்கிய ‘சாய்ராட்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது.

ஷாஜியா இக்பால் இயக்கியுள்ள ‘தடக் 2’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சாதி தொடர்பான வசனங்களால் இப்படம் சென்சாரில் சிக்கலை எதிர்கொண்டது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளியாகவிருந்த இப்படம் பிறகு 2025 மார்ச் மாதம் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தாமதமானது.

இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற சாதி தொடர்பான 16 வசனங்கள் சென்சார் வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்டு, இப்படத்துக்கு U/A 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x