Published : 02 May 2025 10:56 PM
Last Updated : 02 May 2025 10:56 PM
நடிகர் அனில் கபூர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் சஞ்சய் கபூர் ஆகியோரின் தாயார் நிர்மல் கபூர், வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.
கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று (மே 02) மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தயாரிப்பாளர் சுரீந்தர் கபூரை மணந்த நிர்மல் கபூருக்கு போனி கபூர், சஞ்சய் கபூர், அனில் கபூர், ரீனா கபூர் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தனர். மேலும் இவர் அர்ஜுன் கபூர், சோனம் கபூர், ரியா கபூர், ஹர்ஷ் வர்தன் கபூர், ஜான்வி கபூர், அன்ஷுலா கபூர், குஷி கபூர் மற்றும் மோஹித் மர்வா ஆகியோரின் பாட்டியும் ஆவார். நிர்மல் கபூரின் இறுதிச் சடங்குகள் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT