Published : 22 Apr 2025 12:46 PM
Last Updated : 22 Apr 2025 12:46 PM
பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
‘புலே’ பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் காஷ்யப் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
இதனிடையே மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார் அனுராக் கஷ்யாப். இது தொடர்பாக, “கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் வரம்புகளை மறந்துவிட்டேன். முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டேன். என் வாழ்க்கையில் பல நண்பர்கள் அந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. இன்று அவர்கள் அனைவரும் என்னால் காயப்பட்டுள்ளார்கள். என் குடும்பம் என்னால் காயப்படுத்தப்படுகிறது. நான் மதிக்கும் பல அறிவுஜீவிகள், என் கோபத்தாலும் என் பேச்சு முறையாலும் காயப்படுகிறார்கள்.
இப்படிச் சொன்னதன் மூலம், நானே என் சொந்தக் கண்ணோட்டத்திலிருந்து விலகிவிட்டேன். இந்த சமூகத்திடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் யாரோ ஒருவரின் மலிவான கருத்துக்கு பதிலளிக்கும் போது கோபத்தில் அதை எழுதினேன். நான் பேசும் விதம் மற்றும் அவதூறான வார்த்தைகளுக்காக எனது நண்பர்கள், என் குடும்பத்தினர் மற்றும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது இது மீண்டும் நடக்காமல் இருக்க, என் கோபத்தை நான் சரி செய்வேன். இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டியிருந்தால், சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் அனுராக் காஷ்யப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT