Published : 22 Feb 2025 05:47 AM
Last Updated : 22 Feb 2025 05:47 AM
சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் நச்சுத்தன்மை குறித்து பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரீத்தி ஜிந்தா. இவர் கடந்த 2016 முதல் பாலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் கடந்த 2016-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜீன் குட்இனஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2021-ல் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார் பிரீத்தி. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை பிரீத்தி ஜிந்தா தனது எக்ஸ் கூறியதாவது: தற்போது சமூக வலைதளங்கள் பெருகி விட்டன. அதேபோல் சமூக வலைதளங்களில் நச்சுத்தன்மையும் பெருகிவிட்டது. இது எனக்கு கவலை அளிப்பதாக உள்ளது. சமூக வலைதளங்களில் ஒருவரை ட்ரோல் செய்து மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குள் இருக்கிற இழிவுத்தன்மையை சமூக வலைதளங்கள் வழியாக காட்டுகின்றனர். சமூக வலைதளங்களில் நாம் பிரதமரைப் பாராட்டிப் பேசினால், உடனடியாக அவருடைய பக்தர் என முத்திரை குத்தப்படுகிறார். இது சரியான விஷயம் அல்ல. மக்கள் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும். மக்களின் உண்மையான முகம்தான் சரியான விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT