Published : 05 Feb 2025 08:40 PM
Last Updated : 05 Feb 2025 08:40 PM
நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், இப்போது தமிழில் மாதவனுடன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் விஜய் இயக்கும் இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு 18-ம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், நடிகை கங்கனா, இப்போது ஓட்டல் தொழிலில் இறங்கியுள்ளார். இமயமலையில் ‘தி மவுன்டெய்ன் ஸ்டோரி’ என்ற உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். வரும் 14-ம் தேதி திறக்கப்படும் இந்த உணவகத்தில் உண்மையான இமாச்சல பிரதேச உணவு வகைகள் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
புதிய உணவகத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கங்கனா, இது உங்களுடனான எனது உறவின் கதை என்றும், அம்மாவின் சமையலறை ஏக்கத்துக்கு இந்த உணவகம் ஒரு காணிக்கை என்றும், எனது சிறுவயது கனவு இப்போது நனவாகிறது என்றும் தெரிவித்துள்ளார். மணாலியில் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. கங்கனாவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் பிரபலங்கள் ஓட்டல் தொழில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் மும்பையின் கொலாபா பகுதியில் ‘நுமா’ என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். நடிகை ஷில்பா ஷெட்டி 'பாஸ்டியன்' என்ற பெயரிலும் ஹிர்த்திக் ரோஷன் லோயர் பரேலில் ஓட்டல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். ஜூஹு சாவ்லா மும்பையில் ரு டு லிபன் (Rue Du Liban) என்ற ஓட்டலை நடத்தி வருகிறார். சைஃப் அலி கான் உட்பட மேலும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.
A childhood dream comes alive.
— Kangana Ranaut (@KanganaTeam) February 5, 2025
My little cafe in the lap of Himalayas.
Important announcement coming at 10am. pic.twitter.com/GW4d2BKDPj
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT