Published : 05 Feb 2025 07:26 PM
Last Updated : 05 Feb 2025 07:26 PM
2000-ம் ஆண்டு ‘உலக அழகி’ பட்டத்தை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா சோப்ரா.
கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படம் மூலம் திரையுலகில் நடிகையான அறிமுகமானார்.
‘தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை’ (The Hero: Love Story of a Spy) படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.
பாலிவுட்டில் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அதிலிருந்து வெளியேறி 2016-ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.
இந்திப் படங்களில் நடித்து வந்த அவர் ஹாலிவுட் சென்று வெற்றிக் கொடி நாட்டினார்.
உலக அளவில் அதிக சம்பளம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் பிரியாங்கா சோப்ரா.
பிரபல அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பிரியங்கா சோப்ரா நடித்த ‘சிடாடல்’ (Citadel) இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
“சினிமா துறையில் 22 ஆண்டு காலம் இருக்கிறேன். இதுவரை 70 திரைப்படங்களிலும் 2 டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன். ஆனால் ‘சிட்டாடல்’ தொடரில் நடிக்கும்போது எனது கரியரிலேயே முதன்முறையாக ஆண் நடிகருக்கு இணையான ஊதியத்தைப் பெற்றேன்” என்று அப்போது சொன்னார்.
“பிரியங்கா சோப்ரா... பெண்களுக்குச் சிறந்த முன் மாதிரியாக இருக்கிறார். பெரிதாக யோசிக்க அவர்தான் கற்றுக்கொடுக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் அதிகார மையங்களில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்பது சமந்தாவின் கூற்று.
‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தில், மகேஷ் பாபுவுக்கு இணையான கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார் பிரியங்கா சோப்ரா.
“என் வசம் ஒருபோது சிறிய இலக்குகளே இருக்காது!” என்று கூறும் பிரியங்கா சோப்ரா ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பது போல திரையுலகின் மிக முக்கிய ஆளுமையாக வலம் வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT