Published : 15 Jan 2025 12:20 AM
Last Updated : 15 Jan 2025 12:20 AM

கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ படத்துக்கு வங்கதேசம் தடை விதித்துள்ளதாக தகவல்!

டாக்கா: கங்கனா இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ படத்துக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எமர்ஜென்சி திரைப்படம், இந்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டங்களில் ஒன்றான கடந்த 1975-ம் ஆண்டு இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசரநிலை குறித்து பேசுகிறது. கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், அனுபம் கேர் மற்றும் ஸ்ரேயாஸ் தல்பாடே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எமர்ஜென்சி திரைப்படம் ஜனவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்துக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையே தற்போது ஏற்பட்டுள்ள விரிசலே இந்த தடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த 2024 ஆகஸ்ட்டில் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அப்போது, அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x