Published : 08 Dec 2024 01:20 PM
Last Updated : 08 Dec 2024 01:20 PM
பல டான் படங்களைக் கொடுத்து பாலிவுட்டை மிரட்டிய தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா, இணையத்தில் வம்பு வளர்ப்பதிலும் வல்லவர். பாலிவுட் பிரபலங்களில் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரை பலரையும் பாரபட்சமின்றி விமர்சித்து பரபரப்பைக் கிளப்புவது அவரது பொழுதுபோக்கு. அந்த வகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நர லோகேஷ், மருமகள் பிராமணி, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரைப் பற்றி சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா மீது சட்ட நடவடிக்கையும் பாய்ந்தது.
தனது 'வியூகம்' படத்துக்கான விளம்பரத்துக்காக இப்படி விபரீதத்தில் ஈடுபட்டு வினையில் மாட்டிக்கொண்டார் வர்மா. கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவானவர், ஒருவழியாக முன் ஜாமீன் பெற்று தப்பித்துக்கொண்டார். எனினும், அடங்காத அசுரனாகப் பேசிவரும் வர்மா, 'ஒரு வருடத்துக்கு முன்பு போட்ட பதிவுக்கு இப்போது வழக்கு தொடர்கிறார்கள்; எல்லாம் ஊடகங்கள் செய்யும் வேலை' என்கிற ரீதியில் பொறுமையிழந்து பொருமிக்கொண்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT