Published : 11 May 2024 06:06 AM
Last Updated : 11 May 2024 06:06 AM

லோகண்ட்வாலா சந்திப்புக்கு நடிகை ஸ்ரீதேவி பெயர்: மும்பை மாநகராட்சி கவுரவம்

மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீதேவி, பின்னர் கதாநாயகியானார். 1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக இருந்த அவர், 1983-ல் இந்தியில் வெளியான 'ஹிம்மத்வாலா' படம் மூலம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து இந்தியில் நடித்து முன்னணி இடம் பிடித்த அவர், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள். கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்கு மரணமடைந்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாகவும் அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பை மாநகராட்சி, லோகண்ட்வாலா சந்திப்பு ஒன்றுக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக் (Sridevi Kapoor Chowk) என பெயரிட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் ஸ்ரீதேவி வசித்து வந்தார். அவர் இறுதி ஊர்வலமும் இந்த வழியாகத்தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x