Published : 21 Feb 2024 10:49 AM
Last Updated : 21 Feb 2024 10:49 AM
மும்பை: தாதா சாஹேப் பால்கே சர்வேதேச திரைப்பட விழா விருதுகள் நேற்று (பிப்.21) மும்பையில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் ஷாருக்கான், ராணி முகர்ஜி, நயன்தாரா, கரீனா கபூர், ஷாஹித் கபூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ‘ஜவான்’ படத்துக்காக ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக ‘அனிமல்’ சந்தீப் ரெட்டி வங்கா தேர்வு செய்யப்பட்டார்.
தாதா சாஹேப் பால்கே சர்வேதேச திரைப்பட விழா விருதுகள் 2024 முழு பட்டியல்:
சிறந்த நடிகர்: ஷாருக்கான் (ஜவான்)
சிறந்த நடிகை: நயன்தாரா (ஜவான்)
சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (Mrs சாட்டர்ஜி vs நார்வே)
சிறந்த இயக்குநர்: சந்தீப் ரெட்டி வங்கா (அனிமல்)
சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு): விக்கி கவுஷல் (சாம் பகதூர்)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர் (ஜவான்)
சிறந்த வில்லன் நடிகர்: பாபி தியோல் (அனிமல்)
சிறந்த நடிகை (டிவி சீரியல்): ரூபாலி கங்குலி (அனுபமா)
சிறந்த நடிகர் (டிவி சீரியல்): நீல் பட் (கும் ஹை கிஸிகே பியார் மெய்ன்)
ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொடர்: கும் ஹை கிஸிகே பியார் மெய்ன்
சிறந்த நடிகை (வெப் தொடர்): கரிஷ்மா தன்னா (ஸ்கூப்)
திரைத் துறைக்கு சிறந்த பங்களிப்பு: மவுசுமி சாட்டர்ஜி
இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு: கே.ஜே.யேசுதாஸ்
ஆண்டுதோறும் திரைத்துரையில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தாதா சாஹேப் பால்கே விருதுக்கும் இந்த விருது விழாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் என்ற பெயரில் தனியார் அமைப்பு இந்த விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT