Last Updated : 23 Dec, 2017 04:43 PM

 

Published : 23 Dec 2017 04:43 PM
Last Updated : 23 Dec 2017 04:43 PM

பிரியங்கா சோப்ராவுக்கு டாக்டர் பட்டம்: பரேய்லி இன்டர்நேஷனல் பல்கலைக்கழகம் வழங்குகிறது

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பரேய்லி இன்டர்நேஷனல் பல்கலைக்கழகம் நாளை வழங்க உள்ளது.

சர்வதேச அடையாளமாகத் திகழும் பிரியங்காவுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் கேஷவ் குமார் அகர்வால் நாளை நடைபெற உள்ள ஒரு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளார். இவ்விழாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் உத்தரப் பிரதேச நிதி அமைச்சர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இவ்விழாவில் பிரியங்கா சோப்ரா தனது சொந்த ஊருக்கு 5 ஆண்டுகள் கழித்து திரும்பியுள்ளதை சிறப்பிக்கும் விதமாக ஒரு நினைவுப்பரிசும் பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்குகிறார்.

இதுகுறித்து, பிரியங்காவின் தாயார் மது சோப்ரா கூறுகையில், ''பல்வேறு சமூக காரணங்களுக்காக பிரியங்கா ஆற்றிய சேவைக்காக இந்த கவுரவிப்பு என்பதால் மிகப் பெரிய மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். அவர் நியாயமானவர். கடவுள் அவரை ஆசீர்வதிப்பாராக, அவருக்கு நன்மை செய்வதற்கான பலத்தை, அவருக்குக் குறைந்தபட்ச அதிர்ஷ்டத்தை கடவுள் அவருக்குக் கொடுக்கட்டும்'' என்றார்.

பிரியங்கா சோப்ரா 2000-ம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றவர். அதைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x