Published : 12 Oct 2022 04:25 AM
Last Updated : 12 Oct 2022 04:25 AM

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரும் 15-ம் தேதி, பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் வரும் 15-ம் தேதி காலை நடைபெறுகிறது.

இப்பணியிடங்கள் முழுமை யாக பெண்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதியாக 2020,2021 மற்றும் 2022 கல்வி யாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும், உடல் தகுதியாக உயரம் 150 செ.மீட்டரும், எடை 40 கிலோவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாத சம்பளமாக ரூ.16,557, உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும்.

இதில், எஸ்சி, எஸ்டி மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தகுதியுடைய பெண் பணிநாடுநர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ் மற்றும் நகல்களுடன், இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x