Last Updated : 01 Oct, 2022 02:53 PM

 

Published : 01 Oct 2022 02:53 PM
Last Updated : 01 Oct 2022 02:53 PM

கோவையில் வரும் 10-ம் தேதி தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்

தொழில்பழகுநர் பயிற்சி பெறும் மாணவர்கள் | கோப்புப்படம்

கோவை: கோவையில் வரும் 10-ம் தேதி தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம், கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 10-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெற்றால், தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.

தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும் கிடைக்கிறது. தொழிற்பழகுநர் பயிற்சியின்போது தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழிற்நிறுவனங்களால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி தேர்ச்சி பெற்றவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் கோவை-29 என்ற முகவரியிலோ அல்லது 9486447178, 9442651468, 9840343091 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x