Published : 04 Jul 2022 06:21 AM
Last Updated : 04 Jul 2022 06:21 AM
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை:
பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசுதொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி,முதுகலை ஆசிரியர் பணியிடங் களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ் சல் வாயிலாகவோ உரிய கல்வித்தகுதிச்சான்றுகளுடன் தொடர்பு டைய மாவட்டக்கல்வி அலுவலரி டம் (District Educational Officer) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப்பலகையில் 02.07.2022 வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப் பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 06.07.2022 மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப் படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது.
மின்னஞ்சல் மூலமாக விண்ணப் பிப்பவர்கள் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு 'deokki2018@gmail.com', திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்திற்கு 'deotkr2018@gmail.com', உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்கு 'deoupt65@gmail.com' ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்முகவரி, கடலூர்கல்வி மாவட்டத்திற்கு 'cud01temtrs@gmail.com', வடலூர் கல்வி மாவட்டம்: 'deovadr01temptrs@gmail.com', சிதம்பரம் கல்வி மாவட்டம்: 'cdmsmc2022@gmail.com', விருத்தாசலம் கல்வி மாவட்டம்: 'vdm22temtrs@gmail.com' ஆகும். இதே போல் விழுப்புரம் மாவட்டத்திலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அனைத்து விவரங்களும், மாவட்டக் கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT