Published : 19 Aug 2019 12:35 PM
Last Updated : 19 Aug 2019 12:35 PM

வேலை வேண்டுமா? இளங்கலைப் பட்டதாரிகளுக்கு வங்கி அதிகாரிப் பணி; காலியிடங்கள் 4,336

வங்கி அதிகாரிகளுக்கான வேலை குறித்து, வங்கிப் பணியாளர்கள் தேர்வு மையமான ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி வங்கி அதிகாரிகளுக்கான 4,336 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. வேலையின் பெயர்: நன்னடத்தை அதிகாரிகள்/ மேலாண்மைப் பயிற்சியாளர் (PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES)

2.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. காலியிடங்கள்: 4,336

1. அலகாபாத் வங்கி - 500
2. பேங்க் ஆப் இந்தியா - 899
3. மகாராஷ்டிரா வங்கி - 350
4. கனரா வங்கி - 500
5. கார்ப்பரேஷன் வங்கி - 150
6. இந்தியன் வங்கி - 493
7. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் - 300
8. யுகோ வங்கி - 500
9. யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 644

4. வயது வரம்பு: 01.08.2019-ல் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி 5 வருடங்களும் தளர்வு வழங்கப்படும்.

5.தேர்வு முறை:
1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு (ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்)
2. முதன்மை எழுத்துத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 12,13,19 மற்றும் 20, அக்டோபர் 2019
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 30 நவம்பர் 2019

எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைன் மூலம் https://ibpsonline.ibps.in/crppot9jul19/ என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து அதில் கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.600. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக்கான கட்டணம் ரூ.100.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.08.2019

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற இணைய முகவரியை அணுகலாம்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x