Published : 19 Nov 2025 07:06 AM
Last Updated : 19 Nov 2025 07:06 AM

நவ. 21-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: சென்னை கிண்டியில் நடைபெறுகிறது

கோப்புப்படம்

சென்னை: சென்​னை கிண்​டி​யில் தனி​யார் துறை வேலை​வாய்ப்பு முகாம் வரும் 21-ம் தேதி நடை​பெற உள்​ள​தாக மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: தமிழகத்​தில் அனைத்து மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில் நெறி வழி​காட்​டும் மையங்​களி​லும், தனி​யார்​துறை வேலை​வாய்ப்பு முகாம்​கள் நடத்​தப்​பட்​டு, வேலை​வாய்ப் ​பற்ற இளைஞர்​களுக்கு தனி​யார் துறை​யில் வேலை​வாய்ப்​பு​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்டுவரு​கின்​றன.

அதன் தொடர்ச்​சி​யாக, சென்னை கிண்​டி​யில் உள்ள ஒருங்​கிணைந்த வேலை​வாய்ப்பு அலு​வலக வளாகத்​தில் செயல்​பட்டு வரும் மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்டு மையத்​தில் தனி​யார் துறை வேலை​வாய்ப்பு முகாம், வரும் 21-ம் தேதி நடை​பெற உள்​ளது.
இந்த முகாமில், 20-க்​கும் மேற்​பட்ட தனி​யார் துறை நிறு​வனங்​கள் பங்​கேற்று காலி பணி​யிடங்​களுக்கு ஆட்​களை தேர்வு செய்ய உள்​ளனர்.

காலை 10 முதல் மதி​யம் 2 மணி வரை நடத்​தப்​படும் முகாமில், 8, 10, 12-ம் வகுப்​பு, ஐடிஐ, டிப்​ளமோ, பொறி​யியல், கலை, அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப பிரி​வில் டிகிரி ஆகிய கல்​வித் தகு​தி​களை உடைய அனை​வரும் கலந்து கொள்​ளலாம். முகாமில் கலந்​து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் பதிவு செய்​வது அவசி​யம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x