Published : 04 Nov 2025 06:15 AM
Last Updated : 04 Nov 2025 06:15 AM

வேலை​வாய்ப்பு பயிற்​சித் துறை சார்​பில் எஸ்ஐ, உதவி பேராசிரியர் பணிக்​கான மாதிரி தேர்​வு​கள் பதிவேற்​றம்

சென்னை: விரை​வில் நடை​பெறவுள்ள சப்​-இன்​ஸ்​பெக்​டர், அரசு கல்​லூரி உதவி பேராசிரியர் பணி​களுக்​கான மாதிரி தேர்​வு​கள் வேலை​வாய்ப்பு பயிற்​சித்​ துறை​யின் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழக அரசின் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​ துறை அரசு பணி​களுக்கு தயா​ராவோர் பயன்​பெறும் வகை​யில் தமிழ்​நாடு கேரியர் சர்​வீசஸ் என்ற பிரத்​யேக இணை​யதளத்தை (/www.tamilnaducareerservices.tn.gov.in) இயக்கி வரு​கிறது.

இதில் டிஎன்​பிஎஸ்​சி, எஸ்​எஸ்​சி, ரயில்​வே, வங்​கி, யுபிஎஸ்சி தேர்​வு​களுக்​கான பாடத்​திட்​டங்​கள், அவற்​றுக்கு படிக்க வேண்​டிய நூல்​கள், முந்​தைய ஆண்டு வினாத்​தாள்​கள், மாதிரி வினாத்​தாள்​கள் மற்​றும் பொது அறிவு குறிப்​பு​கள், அன்​றாட நிகழ்​வு​கள் என ஏராள​மான பயனுள்ள தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. மேலும், தமிழ்​நாடு பாடநூல் கழகம், என்​சிஇஆர்டி பாடப் புத்​தகங்​களை பதி​விறக்​கம் செய்​து​ கொள்​ள​வும் இந்த இணை​யதளத்​தில் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

அதோடு, போட்​டித் தேர்​வு​களை தேர்​வர்​கள் எளி​தாக எதிர்​கொள்​ளும் வகை​யில் மாதிரி தேர்​வு​களும் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த மாதிரி தேர்​வு​களில் தேர்​வர்​கள் பங்​கேற்று தங்​களின் தயாரிப்பு நிலையை அறிந்​து​கொள்ள முடி​யும். விரை​வில் சப்​-இன்​ஸ்​பெக்​டர் தேர்வு மற்​றும் அரசுக் கல்​லூரி உதவி பேராசிரியர் பணி​களுக்​கான தேர்​வு​கள் நடத்​தப்பட உள்​ளன.

இதற்​கான மாதிரி தேர்​வு​களும், உதவி பேராசிரியர் (தமிழ் மற்​றும் ஆங்​கில பாடம் மட்​டும்) மாதிரி தேர்​வு​களும் (ஒவ்​வொரு பாடத்​திட்ட அலகு வாரி​யாக) இந்த இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன. மாதிரி தேர்​வில் பங்​கேற்​போருக்கு அதன் முடிவு தெரிவிக்​கப்​பட்டு மதிப்​பீட்டு அறிக்​கை​யும்​ உடனடி​யாக ஆன்​லைனில்​ வழங்​கப்​படும் என்​று மாநில வேலை​ வழி​காட்​டி மையத்தின்​ அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x