Published : 31 Oct 2025 07:43 AM
Last Updated : 31 Oct 2025 07:43 AM

பூடான் நாட்டில் நர்சு வேலை

சென்னை: தமிழக அரசின் அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பூடான் சுகா​தார அமைச்சக மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்ற நர்​சுகள் (ஆண் மற்​றும் பெண்) தேவைப்​படு​கின்​றனர். விண்​ணப்​ப​தா​ரர்​கள் பிஎஸ்சி நர்​சிங் பட்​டம் பெற்​றிருக்க வேண்​டு்ம. குறைந்​த​பட்​சம் 2 ஆண்டு பணி அனுபவம் அவசி​யம். வயது 23 முதல் 45-க்​குள் இருக்க வேண்​டும்.

தகு​தி​யுடைய நர்​சுகள் https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற இணைப்​பில் தங்​கள் சுய விவரங்​களை பூர்த்தி செய்​து, கல்​விச் சான்​றிதழ் பாஸ்​போர்ட், பணி அனுபவச் சான்​றிதழ் ஆகிய​வற்றை ovemclmohsa2021@gmail.com என்ற மின்​னஞ்​சலுக்கு நவ.

3-ம் தேதிக்​குள் அனுப்ப வேண்​டும். கூடு​தல் விவரங்​களை www.omcmanpower.tn.gov.in என்ற இணை்யதளத்​தில் அறிந்​துக் கொள்​ளலாம். மேலும், 63791 79200 என்ற எண்​ணிலும் தொடர்பு கொள்​ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x