Published : 05 Oct 2025 04:59 AM
Last Updated : 05 Oct 2025 04:59 AM
சென்னை: தமிழக வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழிற்தேர்வு வரும் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது.
இதில் தனித் தேர்வர்களாக பங்கேற்க தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேர்வு கட்டணம் ரூ.200 மற்றும் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான கடைசி நாள் அக்டோபர் 8-ம் தேதி. அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ.4, 5-ம் தேதிகளில் முதல்நிலைத் தேர்வின் கருத்தியல் (தியரி), செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். இதற்கான வழிகாட்டுதல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT