Published : 28 Sep 2025 01:30 AM
Last Updated : 28 Sep 2025 01:30 AM

குரூப்-4 காலி இடங்கள் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரிப்பு

சென்னை: குரூப்-4 தேர்​வில் கூடு​தலாக 727 காலி பணி​யிடங்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் மொத்த பணி​யிடங்​கள் எண்​ணிக்கை 4,662 ஆக உயர்ந்தது.

இதுதொடர்​பாக டிஎன்பிஎஸ்சி செயலர் எஸ்​.கோ​பால சுந்​தர​ராஜ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: கிராம நிர்​வாக அலு​வலர், இளநிலை உதவி​யாளர், தட்​டச்சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர், வனக்​காவலர் உள்​ளிட்ட பல்​வேறு பதவி​களில் 3,935 காலி பணி​யிடங்​களை நிரப்​புவதற்காக ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பு கடந்த ஏப்​ரல் 25-ம் தேதி வெளி​யானது.

இதற்​கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 12-ம் தேதி நடத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், கூடு​தலாக 727 காலி பணி​யிடங்​களுக்​கான பிற்​சேர்க்​கை, தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் அறிவிக்​கப்​பட்ட மொத்த காலி பணி​யிடங்​கள் எண்​ணிக்கை 4,662 ஆக அதி​கரித்​துள்​ளது. கூடு​தல் காலி இடங்​கள் பெறப்​படும் பட்​சத்​தில், கலந்​தாய்​வுக்கு முன்பு இந்த எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கப்​படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x