Published : 18 Sep 2025 04:09 AM
Last Updated : 18 Sep 2025 04:09 AM

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: விடுபட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற இறுதி வாய்ப்பு

சென்னை: நேர்​காணல் இல்​லாத பதவி​கள் அடங்​கிய ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வில் தேர்​வர்​கள் விடு​பட்ட மற்​றும் முழு​மை​யான சான்​றிதழ்​களை ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்ய டிஎன்​பிஎஸ்சி இறுதி வாய்ப்பு அளித்​துள்​ளது.

டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பால சுந்​தர​ராஜ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: கடந்த 2024-ம் ஆண்டு நடத்​தப்​பட்ட ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வில் (நேர்​காணல் இல்​லாத பதவி​கள்) அடங்​கிய வேதி​யிய​லா​ளர், அருங்காட்​சியக காப்​பாட்​சி​யர் (வே​தி​யியல் பாது​காப்​பு), உதவி மேலா​ளர் (சேமிப்பு கிடங்​கு), துணை மேலா​ளர் (தர நிர்​ண​யம்) உள்​ளிட்ட பதவி​களுக்​கான காலி​யிடங்​களை நிரப்ப தகு​தி​யுள்ள தேர்​வர்​கள் சான்​றிதழ்​களை பதிவேற்​றம் செய்​ய அறி​வுறுத்​தப்​பட்​டனர்.

அவ்​வாறு பதிவேற்​றம் செய்​யப்​பட்ட சான்​றிதழ்​கள் மற்​றும் ஆவணங்​கள் சரி​பார்க்​கப்​பட்​டன. அப்​போது சில​சான்​றிதழ்​கள் மற்​றும் ஆவணங்​கள் முழு​மை​யாகவும், சரி​யாக​வும் பதிவேற்​றம் செய்யப்​ப​டா​மல், குறை​பாடுடன் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. அவ்​வாறு குறை​பாடுடன் சான்​றிதழ்​கள் சமர்ப்​பித்த தேர்​வர்​களின் பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அத்​தகைய தேர்​வர்​கள் விடு​பட்ட மற்​றும் முழு​மை​யான சான்​றிதழ்​கள் மற்​றும் ஆவணங்​களை செப்​.21-ம் தேதிக்​குள் பதிவேற்​றம் செய்ய இறுதி வாய்ப்பு அளிக்​கப்​படு​கிறது. அவர்​களுக்கு குறுஞ்​செய்தி மற்​றும் மின்​னஞ்​சல் வாயி​லாக தகவலும் அனுப்​பப்​பட்​டுள்​ளது. குறிப்​பாணை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளபடி, சான்​றிதழ்​கள் மற்​றும் ஆவணங்​களை தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் தங்​களின் ஒரு​முறை ஓடிஆர் வாயி​லாக பதிவேற்​றம் செய்ய வேண்​டும். அவ்​வாறு செய்​யா​விட்​டால் அவர்​களின் விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​படும். இவ்​வாறு அவர்​ கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x