Published : 07 Sep 2025 12:24 AM
Last Updated : 07 Sep 2025 12:24 AM
சென்னை: மாநில தகவல் ஆணையத்துக்கு 98 பணியிடங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறையின் செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் செயலர், பதிவாளர், சட்ட அலுவலர், நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர், சார்பு செயலாளர் (நிர்வாகம்), முதன்மை நேர்முக செயலர் ஆகிய பதவிகளில் தலா ஒருஇடம், 8 நேர்முக செயலர்பணியிடங்கள், 11 பிரிவு அலுவலர் (எஸ்ஓ) பணியிடங்கள்,7 உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ) பணியிடங்கள், 4 உதவியாளர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 98 பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த பணியிடங்களை அயற்பணி, பணிமாறுதல், பதவி உயர்வு மூலம் நிரப்பிக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT