Published : 21 Aug 2025 05:43 AM
Last Updated : 21 Aug 2025 05:43 AM
சென்னை: தமிழக அரசின் நிலஅளவை மற்றும் நிலவரி திட்டத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: நில அளவை செய்வதற்கான உரிமம் (சர்வே லைசென்ஸ்) பெறுவதற்கான 3 மாத கால பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பயிற்சியில் பிஇ சிவில் இன்ஜினியரிங், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், எம்எஸ்சி புவியியல், புவி தொலையுணர்வு, ஜியோ-இன்பர்மேஷன் டெக்னாலஜி பட்டதாரிகளும், சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமா முடித்தவர்களும் சேரலாம்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கவுரையை “https://tnlandsurvey.tn.gov.in" என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்.1-ம் தேதி ஆகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT