Published : 18 Aug 2025 04:54 AM
Last Updated : 18 Aug 2025 04:54 AM

தொழில்​நுட்ப பணி தேர்வு: 47% பேர் வரவில்லை

சென்னை: ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​களுக்​கான போட்​டித் தேர்​வில் 47 சதவீதம் பேர் பங்​கேற்​வில்லை என்று தகவல்கள் கிடைத்​துள்​ளன. தமிழகத்​தில் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​களில் (நேர்​முகத் தேர்வு அல்​லாத பதவி​கள்) 1,033 பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.

இவற்றை நிரப்​புவதற்​கான அறி​விப்​பாணையை தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) கடந்த மே மாதம் 21-ம் தேதி வெளி​யிட்​டது. தொடர்ந்து இணை​ய​வழி​யில் இந்த தேர்​வெழுத 92,495 பட்​ட​தா​ரி​கள் வரை விண்​ணப்​பித்​தனர். இதற்​கான பாட​வாரி​யான போட்​டித் தேர்​வு​கள் கடந்த ஆகஸ்ட் 4 முதல் 10-ம் தேதி வரை கணினி வழி​யில் நடத்​தப்​பட்​டது.

தமிழ் தகு​தித் தேர்வு மற்​றும் பொது அறி​வு, திறனறி​வு, மொழிப்​பெயர்ப்பு தேர்வு நேற்று காலை, மாலை என இரு வேளை​கள் நடை​பெற்​றன. தமிழகம் முழு​வதும் 144 மையங்​களில் நடத்​தப்​பட்ட இந்த தேர்வை எழுத 92,495 பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்​திருந்​தனர்.

ஆனால், 48,627 பேர் மட்​டுமே தேர்​வில் கலந்​து​கொண்​டனர். அதாவது, 43,882 (47.5%) பேர் தேர்​வில் பங்​கேற்​க​வில்​லை. தொடர்ந்து பாட​வாரி​யான எழுத்​துத் தேர்வு இன்று நடை​பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x