Published : 11 Aug 2025 06:24 AM
Last Updated : 11 Aug 2025 06:24 AM
சென்னை: இந்திய விமானப் படை ஆள் சேர்ப்பு முகாம் தாம்பரத்தில் வரும் செப். 2, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இந்திய விமானப் படைக்கான அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு முகாம் தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் வரும் செப்.2 மற்றும் செப்.5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதில் ஆண்களுக்கான ஆள்சேர்ப்பு செப்.2-ம் தேதியும் (காலை 4 மணிமுதல்), பெண்களுக்கான ஆள்சேர்ப்பு செப்.5-ம் தேதியும் (காலை 5 மணிமுதல்) நடைபெறுகின்றன. 12-ம் வகுப்பு தேர்ச்சி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் சேர தகுதியுடையவர்களாவர். விண்ணப்பதாரர்கள் 17.5-ல் இருந்து 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
ராணுவ விமானப் படை முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT