Published : 04 Aug 2025 07:47 PM
Last Updated : 04 Aug 2025 07:47 PM
சென்னை: ஓமன் நாட்டில் பணியாற்ற டெக்னீசியன்கள் தேவைப்படுவதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சஜன்சிங் ஆர்.சவான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஓமன் நாட்டில் பணிபுரிய தொழில்நுட்ப நிர்வாகி (மெல்டிங், மோல்டிங், புராசஸ் கண்ட்ரோல்), குவாலிட்டி இன்ஸ்பெக்டர் (குவாலிட்டி, பைனல் இன்ஸ்பெக்சன்), எலெக்ட்ரிக்கல் பராமரிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு டெக்னீசியன்கள் தேவைப்படுகின்றனர். டிஎம்இ, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது 22 முதல் 26-க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் மாதம் ரூ.37 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும். உணவு, விசா, இருப்பிடம், விமான பயணசீட்டு ஆகியவும் வழங்கப்படும். பணிக்கு செல்வோர் விசா கிடைத்த பின்னர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதும்.
தகுதியுடைய நபர்கள் (ஆண்கள் மட்டும்) ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ், போட்டோ, ஆதார் நகல் ஆகியவற்றை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT