Published : 23 Jul 2025 05:24 AM
Last Updated : 23 Jul 2025 05:24 AM
சென்னை: புதிய துணை மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் உட்பட 64 பணியிடங்களை உருவாக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில்குமார் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: ஆவடி மற்றும் திருப்பூர் மாவட்டம் வேலாம்பாளையத்தில் அரசு துணை மருத்துவமனைகள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, ஆவடியில் ரூ.27 கோடியிலும், வேலாம்பாளையத்தில் ரூ.26.90 கோடியிலும் அதற்கான கட்டிடப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆவடியில் ரூ.7.60 கோடியிலும், வேலாம்பாளையத்தில் ரூ.4.88 கோடியிலும் மருத்துவ உபகரணங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.
அதுதொடர்பாக, புதிய பணியாளர் இடங்களை உருவாக்குவது குறித்தும் மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் பரிந்துரைகளை அனுப்பியிருந்தார்.
அதனை பரிசீலித்த அரசு, 20 மருத்துவர் பணியிடங்கள், 35 செவிலியர் பணியிடங்கள் உட்பட 64 பணியிடங்களை உருவாக்கவும், அவர்களுக்கான ஊதிய செலவினங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT