Published : 30 Jun 2025 07:21 PM
Last Updated : 30 Jun 2025 07:21 PM

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பம்

சென்னை: ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம்) நடத்தப்படுகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாத தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட் டுள்ள அறிவிப்பு: ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர் நாளை (ஜூலை 1) முதல் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணைய விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் ஜூலை 30 முதல் ஆக.1-ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம். புதுமுக இளநிலை, இளநிலை தேர்வுக்கு ரூ.100-ம், இடைநிலை தேர்வுக்கு - ரூ.120-ம், முதுநிலை தேர்வுக்கு ரூ.130-ம், உயர் வேகம் தேர்வுக்கு ரூ.200-ம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x