Published : 20 Jun 2025 06:11 AM
Last Updated : 20 Jun 2025 06:11 AM
சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் பதவிகள்) நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான 2-வது கட்ட பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் உள்ள பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான 2-வது கட்ட நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது.
அக்காலியிடங்களில் துணை மேலாளர் (பாதுகாப்பு), உதவி பொது மேலாளர் (நிதி), கணக்கு அலுவலர், மேலாளர் (கிரேடு-3), முதுநிலை அலுவலர் (நிதி), மேலாளர் (மெக்கானிக்கல்), மேலாளர் (எலக்ட்ரிக்கல்), துணை மேலாளர் (பொருட்கள்), உதவி மேலாளர் (மார்க்கெட்டிங்) உள்ளிட்ட பதவிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், ஒருங்கிணைந்த குருப்-1 தேர்வில், முதன்மைத் தேர்வு கணினிவழியில் கடந்த ஆண்டு டிச. 10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அத்தேர்வில் உள்ள காலியிடத்தை நிரப்புவதற்கான 2-வது கட்ட நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT