Published : 24 May 2025 02:55 PM
Last Updated : 24 May 2025 02:55 PM
சென்னை: குரு விருக்ஷா ஐஏஎஸ் அகாடமியின், யுபிஎஸ்சி 2025–2026-ம் ஆண்டுக்கான இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வுக்கு பதிவு தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு: அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபா மற்றும் ஸ்ரீ ராம கோபாலன் மணிமண்டபம் அறக்கட்டளையின் ஒரு பகுதியாக இயங்கி வரும் குரு விருக்ஷா ஐஏஎஸ் அகாடமி, சாதாரணப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் உயர்வை நோக்கமாகக் கொண்டது. சேவை மனப்பான்மையுடன் யுபிஎஸ்சி போன்ற உயர்தர மத்திய அரசுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை கடந்த ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இது அகாடமியின் இரண்டாவது பயிற்சி ஆண்டு ஆகும்.
இப்போது, 2025–2026 யுபிஎஸ்சி இலவச பயிற்சி நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, முழுமையான UPSC பாடத்திட்ட அடிப்படையிலான பயிற்சி, இலவச நூலக வசதி மற்றும் தேவையான புத்தகங்கள், இலவச காலை மற்றும் மதிய உணவுகள், வாராந்திர, மாதாந்திர மற்றும் மாதிரி தேர்வுகள், நேர்முக வழிகாட்டல் மற்றும் சுய மதிப்பீட்டு பயிற்சிகள் வழங்கப்படும். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை வழிநடத்துவார்கள்.
மேலும் விவரங்களுக்கு, +91 9363923451 மற்றும் +91 9500481074 என்ற தொலைபேசி எண்களிலும், guruvirukshaiasacademy@gmail.com / contact@guruvirukshaiasacademy.com ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT