Published : 06 Mar 2025 06:32 AM
Last Updated : 06 Mar 2025 06:32 AM
சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப வளர்ச்சி மையம் சார்பில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப வளர்ச்சி மையம் சார்பில் மூலிகை அழகுசாதன பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மார்ச் 22, 23-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பயிற்சி நடைபெறும். சோப், கிரீம், ஹேர் ஆயில், ஷாம்பூ, ஃபேஸ் வாஷ், ஜெல் உள்ளிட்ட பல்வேறு அழகுசாதன பொருட்கள் தயாரிப்பது குறித்து செய்முறை விளக்கத்துடன் கற்றுத் தரப்படும்.
இதற்கான கட்டணம் ரூ.12 ஆயிரம். ஆண், பெண் இருபாலரும் சேரலாம். வேலைக்கு செல்லவும், சுயமாக தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி. 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 இடங்கள் மட்டுமே உள்ளதால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை 98415 20816, 82483 09131 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT