Published : 05 Mar 2025 06:41 AM
Last Updated : 05 Mar 2025 06:41 AM
சென்னை: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனி நாட்டில் பணியாற்ற நர்சுகளுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜெர்மனி நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற நர்சுகள் தேவைப்படுகின்றனர். ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி அல்லது டிப்ளமா நர்சிங் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் பணி அனுபவம் அவசியம். மாத ஊதியமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். பி-1, பி-2 நிலையில் இலவசமாக ஜெர்மனி மொழி பயிற்றுவிக்கப்படும்.
எனவே, தகுதியும் விருப்பமும் உடையவர்கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) அறிந்துகொள்ளலாம். மேலும், 044-22505886 / 63791 79200 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT