Published : 10 Feb 2025 01:22 AM
Last Updated : 10 Feb 2025 01:22 AM
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் உயரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு பேருந்து நடத்துநருக்கான தகுதிகள் கடந்த 1998-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. இந்நிலையில், விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து இதர போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் குறைந்தபட்ச உயரம் 150 செமீ என நிர்ணயிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறைத் தலைவர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதை கவனமாக பரிசீலித்த அரசு, ஆண் நடத்துநருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செமீ, பெண் நடத்துநருக்கான உயரம் 150 செமீ, இரு பாலினத்தவருக்கும் குறைந்தபட்ச எடை 45 கிலோ என பொதுசேவை விதிகளில் வரையறுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறும்போது, "பெண் நடத்துநருக்கான தகுதியில் உயரத்தை குறைத்திருப்பதன் மூலம் கருணை அடிப்படையில் ஏராளமான பெண்களுக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT