Published : 24 Jan 2025 07:31 PM
Last Updated : 24 Jan 2025 07:31 PM
சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட இருப்பதாகவும், இதற்கு ஜனவரி 31 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
பாடவாரியான காலிப்பணியிடங்கள், அவற்றுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, ஆன்லைன் விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT